Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்ற அசம்பாவிதத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்: இராதாகிருஸ்ணன்

In இலங்கை
Updated: 05:24 GMT, Jan 12, 2018 | Published: 05:23 GMT, Jan 12, 2018 |
0 Comments
1105
icon_com
This post was written by : Ravivarman
IMG_1412

‘உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்தையும், அங்கு நடைபெற்ற அசம்பாவிதத்தையும் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்’ என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டம் யட்டியாந்தோட்டை பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக யட்டியந்தோட்டை, பனாவத்த தோட்டம் போன்றவற்றில் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றன.

இக் கூட்டங்களில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றுக்கு அனுப்பப்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதத்தையும், அங்கு இடம்பெற்ற அசம்பாவிதத்தையும் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மக்களால் தெரிவு செய்யபட்டவர்கள் மக்கள் நலன் கருதிச் செயற்பட வேண்டும். மக்களது சேவையினை முன்னிறுத்தி அவர்களது வாக்குகளில் பதவியைப் பெற்றுக் கொண்ட தலைவர்கள், இவ்வாறான செயற்பாடுகளால் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

இவ்வாறான அநாகரிகச் செயற்பாடுகள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் தவிர்க்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)