Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பா.ஜ.க தலைவர்களுடன் மோடி ஆலோசனை!

In இந்தியா
Updated: 05:35 GMT, Jan 12, 2018 | Published: 05:35 GMT, Jan 12, 2018 |
0 Comments
1106
This post was written by : Arul Jesu

பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வியாழன்) பா.ஜ.கவின் மூத்த தலைவர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

விரைவில் ‘திரிபுரா’ மற்றும் ‘மேகாலயா’ மாநிலங்களிலும், அடுத்ததாக ‘கர்நாடகா’விலும் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.  இதற்கான வியூகங்களை வகுப்பதற்காகவே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

பிரதமர் மோடியின் இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், நாட்டில் தற்போதைய அரசியல் நிலவரம், விரைவில் நடக்க உள்ள நாடாளுமன்றத்தின் ‘பட்ஜெட்’ கூட்டத்தொடர் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், அடுத்ததாக நடக்க உள்ள மாநில சட்டபேரவைத் தேர்தல்களில் பா.ஜ.கவிற்கு பெரும் வெற்றியை தேடி தருவதற்கான வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக பா.ஜ.க வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg