Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போகும் மஹிந்த?

In இலங்கை
Updated: 06:59 GMT, Jan 12, 2018 | Published: 05:38 GMT, Jan 12, 2018 |
0 Comments
1385
icon_com
This post was written by : Puvanes
mahinda001

மீண்டும் தனக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பதவிக் காலம் தொடர்பிலான சட்ட முரண்பாடுகள் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை) நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 19 ஆவது திருத்தத்திற்கு அமைவாக தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் மாத்திரமே எனச் சுட்டிக்காட்டிய மஹிந்த, அதனை விடுத்து அதனை 6 வருடங்களாக நீடிப்பார்கள் என்றால் தனக்கும், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவ்வாறான நிலை ஏற்பட்டால் நீங்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளீர்களா? என கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதில் அளிக்கும்போது, “இந்த விடயம் தொடர்பாக தற்போது எதுவும் கூறமுடியாது. எதிர்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தற்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களாக நீடிக்கும் சாத்தியம் காணப்படுமாயின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பழைய விதிமுறைகள் செல்லுபடியாகும் எனவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)