Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு ஆபிரிக்க குடியேற்றவாசிகளை நாடுகடத்த லிபியா நடவடிக்கை

In
Published: 05:49 GMT, Jan 12, 2018 |
0 Comments
1098
This post was written by : Risha

ஐரோப்பாவில் குடியேறும் முயற்சியில் தோல்வியுற்று கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய 81 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நாடுகடத்தப்படவுள்ளனர்.

இந்த அறிவிப்பை கிழக்கு லிபியாவிலுள்ள அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளனர்.

குறித்த 81 பேரும், எரித்திரியா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா ஆகிய கிழக்கு ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடல் மார்க்கமாக ஐரோப்பாறை சென்றடைய முயற்சிக்கும் குடியேற்றவாசிகளுக்கான முக்கிய பயணப் புள்ளியாக லிபியா விளங்குகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் மத்தியத்தரைக்கடல் ஊடாக ஐரோப்பாவை சென்றடைந்துள்ளனர்.

கடந்த வருடம் கிழக்கு லிபியாவிலிருந்து 5 ஆயிரத்து 686 குடியேற்றவாசிகள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இது கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)