Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி துனீசியாவில் மீண்டும் போராட்டம்

In
Published: 06:12 GMT, Jan 12, 2018 |
0 Comments
1124
This post was written by : Risha

துனீசியாவில் அரச சொத்துக்களை சேதப்படுத்தி, அரசாங்க விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சுமார் 600 பேரின் விடுதலையை வலியுறுத்தி துனீசிய தலைநகர் துனிஸில் சிறிய குழுவினரால் நேற்று (வியாழக்கிழமை) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரி விதிப்புகள் மற்றும் விலை அதிகரிப்புகளுக்கு எதிரான போராட்டங்களால் நாட்டில் அமைதியின்மை தலைத்தூக்கியுள்ளது.

அதிகரித்துவரும் அரச கடன் சுமையை குறைத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை திருப்திபடுத்துதல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள அரசாங்கம், கடந்த முதலாம் திகதி முதல் புதிய வரி விதிப்புகளையும், விலை அதிகரிப்புகளையும் அமுல்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அதேவேளை, இதனால் வன்முறைகளும் துளிர்விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)