Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷிடேனின் பதவிக்காலம் 2020 வரை நீட்டிப்பு!

In விளையாட்டு
Published: 06:00 GMT, Jan 12, 2018 |
0 Comments
1124
This post was written by : Vithushagan

ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஷினேடின் ஷிடேனின் பதவிக்காலம் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் சர்வதேச கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் ஷிடேனின் ஷிடேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லா லிகா புகழ் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

பார்சிலோனா அணிக்கெதிரான போட்டியில் தனது சொந்த மைதானத்தில் 0-4 என ரியல் மாட்ரிட் தோல்வியடைந்ததால் ரபெல் பெனிடெஸ் நீக்கப்பட்டு ஷிடேன் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஷிடேன் தலைமையில் ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றது. ஷிடேன் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட பின் ரியல் மாட்ரிட் 10-இல் 6 கிண்ணத்தை வென்றுள்ளது.

2017ஆம் ரியல் மாட்ரிட் லா லிகா, சாம்பியன்ஸ் லீக் ஆகியவற்றை கைப்பற்றி அசத்தியது. ஆனால் தற்போது 2017-18 சீசனில் ரியல் மாட்ரிட் அணியின் ஆட்டம் சிறப்பானதாக அமையவில்லை.

இந்த லா லிகா சீசனில் பார்சிலோனாவிற்கு எதிராக தனது சொந்த மைதானத்தில் 0-3 எனத் தோல்வியடைந்ததுடன், 16 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இதனால் ஷினேடின் ஷிடேன் ஒப்பந்தக்காலம் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்று ஷிடேனின் ஷிடேன் ஒப்பந்தத்தை ரியல் மாட்ரிட் அணி 2020 நீட்டித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)