Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோட்டாவை சிறையில் அடைக்க மஹிந்த திட்டம் : இசுறு தேவப்பிரிய

In இலங்கை
Updated: 09:29 GMT, Jan 12, 2018 | Published: 06:07 GMT, Jan 12, 2018 |
0 Comments
2659
This post was written by : Puvanes
gota001

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சிறையில் அடைத்துவிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சதித்திட்டம் தீட்டிவருவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் சுதந்திரக்கட்சிக்கு மக்கள் மத்தியில் களங்கத்தை ஏற்படுத்தும் முகமாகவே மஹிந்த இந்த சதித்திட்டத்தை மேற்கொண்டுள்ளார் எனவும் இசுறு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவை அழைத்து “நான் இல்லாத போது உங்களை சிறையில் அடைத்துவிட இவர்கள் திட்டம் தீட்டிவருகின்றனர் அதனால் நீங்கள் எடுக்கும் தீரமானத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டதாகவும் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனது சகோதரனையே சிறையில் அடைத்துவிட்டு அரசியல் லாபம்தேடும் முயற்சியை மஹிந்த மேற்கொண்டுள்ளார் எனக்குறிப்பிட்ட இசுறு தேவப்பிரிய, இதன் காரணமாகவே தற்போது கோட்டாபய நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)