Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!

In இந்தியா
Published: 07:16 GMT, Jan 12, 2018 |
0 Comments
1086
This post was written by : Arul Jesu
pjimage-4-min-400x240

பி.எஸ்.எல்.வி. சி-40 ரொக்கெட், இன்று (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலைநிறுத்தியமை தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் டுவிட்டரில் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ‘சதீஷ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-40 விண்வெளியில் இஸ்ரோவால் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இது தொட்பில் இந்திய பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,

‘இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்டோசாட்-2 மற்றும் இரண்டு இந்திய செயற்கைக்கோள்கள் மற்றும் ஆறு நட்பு நாடுகளின் 28 செயற்கைக்கோள்களுடன் இணைந்து விண்ணில் செலுத்தப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தருவதாகும். இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு வாழ்த்துக்கள். இது நம் நாட்டிற்கு ஒரு மைல்கல் போன்றதாகும்.’ என்றார்.

Ramnath

இதுகுறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கையில்,

இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!, இந்த புத்தாண்டில் நமது வெற்றியானது விண்வெளி தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள் மூலம் நாட்டின் குடிமகன்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோருக்கு பல நன்மைகளைக் கொண்டு வரும். இந்த 100-வது செயற்கைக்கோள் வெற்றியானது, இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் பிரகாசமான எதிர்காலத்தையும், அதனால் நிகழக்கூடிய மகிமை வாய்ந்த சாதனைகளையும் குறிக்கிறது.’ என்றார்.

Modi 2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)