Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனவாத வன்முறையில் உயிரிழந்தவர்கள் நைஜீரியாவில் நல்லடக்கம்

In உலகம்
Updated: 06:52 GMT, Jan 12, 2018 | Published: 06:52 GMT, Jan 12, 2018 |
0 Comments
1232
This post was written by : Risha

நைஜீரியாவில் நாடோடிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான இன வன்முறையில் உயிரிழந்த 73 பேரின் இறுதிக் கிரியைகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றன.

ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் இடம்பெற்று நைஜீரியாவின் பெனு மாநிலத்தின் மகுர்தி நகரில் உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.

மோதல்களினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பெனு மாநிலத்தில் இவ்வருட ஆரம்பம் முதல் உயிரிழந்த 73 பேரின் இறுதிக் கிரியைகளே நேற்று இடம்பெற்றன.

இந்நிலையில், பெனு மாநிலத்தில் மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில், நைஜீரியாவின் மத்திய குடியரசுத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும், பெனு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் கூடுதல் ராணுவத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பெனு மாநில ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg