Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேகப்பந்து வீச்சாளராக மாறிய அஷ்வின்!

In விளையாட்டு
Updated: 06:41 GMT, Jan 12, 2018 | Published: 06:41 GMT, Jan 12, 2018 |
0 Comments
1813
This post was written by : Vithushagan

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டிகளுக்காக இந்திய அணி  கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில்,  இந்த பயிற்சியின் போது  அஷ்வின் வேகப்பந்து வீச்சாளராக  மாறி பந்து வீசியுள்ளார்.

தென் ஆப்ரிக்க சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72  ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்திய அணியில் சில முக்கிய மாற்றங்கள் அவசியம் என்ற கருத்து அதிகளவில் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து இரண்டாவது டெஸ்டில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் சாதிக்க இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சும் வீசி வருகின்றார்.

ஏற்கனவே இரண்டு சுழற்பந்து (ஆப் மற்றும் லெக்) வீச்சையும் முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் கண்ட அஷ்வின், தற்போது வேகப்பந்து வீச்சையும் முயற்சி செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg