Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏலியன்கைளை சீண்டிப்பார்க்கும் ஓர் தேடல்!

In அறிவியல்
Updated: 07:36 GMT, Jan 13, 2018 | Published: 06:30 GMT, Jan 12, 2018 |
0 Comments
1228
This post was written by : Puvanes
moon002

நிலவு என்பது பாரிய மர்மங்களை உள்ளடக்கிக்கொண்டு பூமியோடு இணைந்து சுற்றிக்கொண்டு வருகின்றது. இத்தகைய நிலவு தொடர்பிலான பல அறிவியல் ரீதியிலான கேள்விகளுக்கு இன்றுவரை பதில் இல்லை.

இந்தநிலையில் நிலவின் மறுபக்கம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு சீனா லூனார் ரோவர் எனப்படும் செய்மதியை எதிர்வரும் ஜூன் மாதம் அனுப்பிவைக்கவுள்ளது.

குறிப்பாக பூமியில் இருந்து பார்க்கும் போது நிலவின் ஒருபக்கம் மட்டுமே தெரியும் அதன் அடுத்த பக்கம் எப்போதுமே பூமிக்கு தென்படாது. இதுவரையிலும் நிலவின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செய்மதிகள் அனுப்பப்படவில்லை.

நிலவின் மறுபக்கத்தில் வேற்றுக்கிரகவாசிகள் வசித்துவருவதாகவும் அதன்காரணமாகவே எந்தநாடும் மீண்டும் நிலவிற்கு மனிதரை அனுப்ப நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சில ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோன்று 1969ஆம் ஆண்டு நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்ததும் பொய் என்ற செய்திகளை மேலைத்தேய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. மற்றொருவகையில் நிலவில் கால் பதித்தபோது அங்கு வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் இதனாலேயே 1969ஆம் ஆண்டுக்கு பின்னர் மனிதர்கள் நிலவுக்கு செல்லவில்லை எனவும் செய்திகள் வெளிவந்தன.

இந்தநிலையில் நிலவின் மறுபக்கம் தொடர்பாக சீனா மேற்கொள்ளப்போகும் ஆய்வுகள் வெற்றியளிக்குமாயின் நிலவு தொடர்பான பல்வேறு மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

ஏற்கனவே நிலவு வேற்றுக்கிரகவாசிகள் மூலமாக திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள இரகசியத்தளம் என ஆய்வாளர்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

மேலும் நிலவில் வேற்றுக்கிரகவாசிகள் வசித்து வருகின்றனர் எனவும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து வருவதோடு இதனை நாசா போன்ற நிறுவனங்கள் அறிந்திருந்தாலும் வெளிப்படுத்த தயங்குகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான பல்வேறு கருத்துகளுக்கு சீனாவின் லூனார் ரோவர் செயற்திட்டம் பதில்அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)