Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்: மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வு நிலையம்!

In இலங்கை
Updated: 08:28 GMT, Jan 12, 2018 | Published: 06:39 GMT, Jan 12, 2018 |
0 Comments
1128
This post was written by : Ravivarman
download

ஜனாதிபதி மைத்திரிபாலவ சிரிசேன தன்னுடைய முன்னைய உறுதிமொழிகளை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தற்போதைய பதவிக் காலம் 5 வருடங்க் மாத்திரமே என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பில் மாற்றுக் கொள்கைக்கான ஆய்வு நிலையம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“அரசியலமைப்பிற்கான பத்தொன்பதாவது திருத்தமானது இத்திருத்தத்தின் எவ்வாறான ஏற்பாடுகள் தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கின்ற ஜனாதிபதி சிறிசேனவிற்கு ஏற்பாகாது என்பதை தெளிவாக கூறுவதுடன் என்பதுடன் பதவிக்காலத்தின் குறைப்பானது அத்தகைய ஒரு ஏற்பாடல்ல என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கின்றது.

மேலும், பத்தொன்பதாவது திருத்தத்தின் உருவாக்கத்திற்கான வழிநடத்துகையின்போது, பத்தொன்பதாவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் குறைப்பு தொடர்பிலான விடயம் தனக்கும் பொருந்தும் என்ற கருத்தை வெளிப்படுத்தினார் என்பதை சுட்டிக் காட்டியுள்ள மாற்றுக் கொள்கைக்கான ஆய்வு நிலையம், அதனை  ஜனாதிபதி மறந்திருக்க மாட்டார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஆக, அரசியலமைப்பின் 19ஆவது சீர்திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இது குறித்து குழப்பமடையத் தேவையில்லை. எனினும் நேற்று சட்டமா அதிபர் பிரியந்த டெப் 6 வருடங்கள் வரை நீடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)