Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெடேனை சந்திக்கிறார் பெடரர்!

In விளையாட்டு
Updated: 07:06 GMT, Jan 12, 2018 | Published: 07:06 GMT, Jan 12, 2018 |
0 Comments
1143
This post was written by : Vithushagan

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் ரோஜர் பெடரர் தனது முதலாவது சுற்றில் 51 நிலை வீரரான அல்ஜாஸ் பெடேனை எதிர்கொள்கிறார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது நேற்று குலுக்கல் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.

குறித நிகழ்ச்சியில் பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டு வாகை சூடிய செரீனா வில்லியம்ஸ் இந்த முறை விலகி விட்டதால், அவருக்கு பதிலாக முன்னாள் சாம்பியன் மரிய ஷரபோவாவும் (ரஷியா), ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் ‘டிரா’ நிகழ்ச்சியில் கோப்பையுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

உலக தரவரிசையில் 2ஆவது இடம் வகிக்கும் ரோஜர் பெடரர் தனது முதலாவது சுற்றில் 51ஆம் நிலை வீரரான அல்ஜாஸ் பெடேனை (சுலோவேனியா) எதிர்கொள்கிறார்.

முதல்தர வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் தனது முதல் சவாலை விக்டர் எஸ்ட்ரிலா பர்கோசுடன் (டொமினிகன் குடியரசு)  தந்து ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg