Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் பெண் அதிபருக்கு அரசியல்வாதியால் ஏற்பட்ட நிலை! – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை

In இலங்கை
Updated: 08:01 GMT, Jan 12, 2018 | Published: 07:19 GMT, Jan 12, 2018 |
0 Comments
1587
icon_com
This post was written by : Puvanes
teacher001

ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அரசியல்வாதி ஒருவர், தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவரை, காலில் வீழ்ந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

அண்மையில், குறித்த அரசியல்வாதி தனக்கு வேண்டப்பட்டவர் ஒருவரின் புதல்விக்கு பதுளை பாடசாலையில் அனுமதி கோரி சிபாரிசு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

எனினும் பாடசாலையின் அதிபர் அந்த சிபாரிசு கடிதத்தினை நிராகரித்துள்ளதோடு, பாடசாலை அனுமதியினையும் மறுத்து தான் கல்வி அமைச்சிக்கு கட்டுப்பட்டே பணியாற்றுவதாகவும், அரசியல்வாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய பணியாற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அறிந்த குறித்த அரசியல்வாதி சம்பந்தப்பட்ட அதிபரை தன் வீட்டுக்கு அழைத்துவந்து அவரை தன்முன் பலவந்தமாக மண்டியிட்டு மன்னிப்பு கோரவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த சம்பவமானது பல்வேறு விதமான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மனித உரிமை ஆணைக்குழு இது தொடர்பான விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)