Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்ரோனின் விஜயம் பயன்மிக்கதாக அமைந்தது: சீனா

In உலகம்
Updated: 07:31 GMT, Jan 12, 2018 | Published: 07:31 GMT, Jan 12, 2018 |
0 Comments
1211
This post was written by : Risha

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் சீன விஜயம் மிகவும் பயன்மிக்கதாக அமைந்ததாக சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போதான சாதனைகள் குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், இருநாட்டு தலைவர்களிடையிலான பேச்சுவார்த்தையில் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகள் முக்கியம் வாய்ந்ததாக அமைந்தன.

இதேவேளை, பரஸ்பர மரியாதை, நட்பு மற்றும் நீண்டகால முன்னோக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பை மேம்படுத்த இதன்போது விரிவான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், பாரம்பரிய, உள்நாட்டு அணுசக்தி மற்றும் விண்வெளி துறைகளில் இருதரப்பின் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், விவசாயம், உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பாகவும் இருதரப்பும் உடன்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg