Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரைத் தாக்க முயன்றவர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

In இலங்கை
Updated: 08:03 GMT, Jan 12, 2018 | Published: 08:03 GMT, Jan 12, 2018 |
0 Comments
1068
This post was written by : Ravivarman
images

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரைத் தாக்க முயன்ற தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களை கிளிநொச்சி நீதவான் நீதின்றம் நேற்று (வியாழக்கிழமை) எச்சரித்து விடுதலை செய்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

‘கிளிநொச்சி, பிரமந்தனாறு பகுதியில் கடந்த புதன் கிழமை தமது பிரதேச தேர்தல் அலுவலகத்தை அமைக்கும் பணியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ஈடுபட்டிருந்தார்.

அதன்போது கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் குறித்த பிரதேச வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவர் அலுவலகத்திற்கு உள்நுழைந்து தாக்குவதற்கு முயன்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் உடனடியாக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இதனையடுத்து பிரமந்தனாறு பிரதேசத்தின் தமிழரசுக் கட்சியின் வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டு நேற்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களை தலா ஜம்பதாயிரம் ஆட் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், தேர்தல் முடியும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து வழக்கை எதிவரும் மார்ச் மாதம் ஒத்தி வைத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)