Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக நீதிபதிகள் போர்கொடி!

In இந்தியா
Updated: 08:12 GMT, Jan 12, 2018 | Published: 08:12 GMT, Jan 12, 2018 |
0 Comments
1265
This post was written by : Arul Jesu

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ராவை’ பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் நான்கு பேர் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்கள் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், குரியன் ஜோபன், மதன் லோகுர் மற்றும் கோகோய் ஆகியோர் திடீரென தீபக் மிஸ்ரா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அவரை பதவியில் இருந்து நீக்கும்வரை தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட தீர்மானத்துள்ளதாகவும் பத்திரிகையாளர் மத்தியில் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது, நாட்டின் நீதி நிர்வாகத்தை சரி செய்யாவிட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்படும். நீதிபதி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும், உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது, நீதித்துறை மீதான சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும், வழக்குகள் பாரபட்சமாக விசாரிக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம், கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது.

இரண்டு மாதங்களிற்கு முன்பு நான்கு நீதிபதிகள் சேர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். ஆனால் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே தனிப்பட்ட முறையில் எடுத்து வருகிறார். இதனால் நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, முக்கிய விடயங்களை நாங்கள் நாட்டுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg