Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் பிரித்தானிய விஜயம் ரத்து!- ஒபாமா நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

In
Updated: 08:39 GMT, Jan 12, 2018 | Published: 08:39 GMT, Jan 12, 2018 |
0 Comments
1297
This post was written by : Risha

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முன்னெடுக்கவிருந்த லண்டனுக்கான விஜயத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் வகையிலேயே ட்ரம்பின் விஜயம் அமையவிருந்தது.

இந்நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் தெற்கு லண்டனில் தூதரம் திறக்கப்படுவது தொடர்பாக தான் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவித்து, விஜயத்தை ரத்து செய்வதாக டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, மேஃபேரில் இருந்த அமெரிக்க தூதரகக் கட்டடத்தை ஒபாமா நிர்வாகம் வேர்க்கடலைக்கு விற்பனை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன், இவ்வாறனதொரு முறையற்ற உடன்படிக்கையின் மூலம் அமைக்கப்பட்ட கட்டடத்தை தான் திறந்து வைப்பதா என்ற வகையில் கருத்து பதிவிட்டுள்ளார்.

எனினும், ட்ரம்பின் லண்டன் விஜயம் ரத்து தொடர்பாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் இதுவரை எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg