Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு: பிரதமர் அவசர ஆலோசனை!

In இந்தியா
Updated: 09:21 GMT, Jan 12, 2018 | Published: 08:46 GMT, Jan 12, 2018 |
0 Comments
1155
This post was written by : Arul Jesu
Narendra-Modi-031216-2

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ரா’ மீது நான்கு நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதையடுத்து மத்திய நீதியமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை ஒன்றை நடத்திவருகின்றார்.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் உள்ளிட்ட நான்கு பேரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின் போது உச்சநீதிமன்ற வளாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்தும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே தனிப்பட்ட முறையில் எடுத்து வருகிறார். மற்ற நீதிபதிகளுக்கு அவர் வாய்ப்பு அளிக்க வேண்டும். தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ராவை’ நீக்குவது பற்றி தேசம் சிந்திக்க வேண்டும், என கூறினர்.

குறித்த பிரச்சினைக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சுமூகமான முறையில் தீர்த்து வைப்பது தொடர்பிலேயே பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனையை நடாத்தி வருகின்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)