Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

த.தே.கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் வவுனியாவில் வெளியீடு!

In இலங்கை
Published: 09:51 GMT, Jan 12, 2018 |
0 Comments
1126
icon_com
This post was written by : Ravivarman
path

வவுனியா நகரசபையில் ஆட்சி அமைத்த பின்னர் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டது.

வவுனியா, குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களால் குறித்த கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் நகரசபை வேட்பாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா நகரசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் இடத்தில் எதிர்வரும் நான்கு வருடங்களில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகள் குறித்து இந்தக் கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுகாதாரம் துறையில் திண்ம திரவ கழிவு முகாமைத்துவம், நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் உற்பத்தியாகும் திண்ம, திரவ கழிவுகளை அகற்றலும் முகாமைத்துவம் செய்தலும், நோய்கள் பரவாதிருக்க உரிய நடவடிக்கைகளை சுகாதார திணைக்களத்துடன் இணைந்து மேற்கொள்ளல், இளைஞர்களுக்கான உடல்வலுவூட்டல் மையங்களை உருவாக்குதல் என்பனவும், விளையாட்டு தொடர்பில் நவீனவசதிகளுடனான, தேசிய தரத்திலான விளையாட்டு மைதானத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)