Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் புதிய கூட்டணி: பேச்சுவார்த்தையில் திருப்புமுனை

In ஐரோப்பா
Updated: 09:06 GMT, Jan 12, 2018 | Published: 09:06 GMT, Jan 12, 2018 |
0 Comments
1094
This post was written by : Risha

புதிய கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜேர்மன் அரசியல்வாதிகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

அதன்படி கூட்டணி அமைப்பது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) முறையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சிக்கும் சமூக ஜனநாயக கட்சிக்கும் இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம், பல மாதங்களாக நீடித்துவந்த அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்பிருப்பதாக கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜேர்மனியில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சி போதியளவான பெரும்பான்மையைப் பெறவில்லை. இதன் காரணமாக, ஜேர்மனியில் புதிய அரசாங்கத்தை அமைக்க கூட்டணிக் கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், சி.டி.யூஃசி.எஸ்.யூ மற்றும் கிறீன்ஸ், எப்.டி.பி ஆகிய கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து எப்.டி.பி கட்சி விலகியதால், அரசியல் நெருக்கடியில் ஜேர்மனி சிக்கியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg