Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளியானது புதுத்தகவல்! – சிக்கப்போகின்றவர் கோட்டாவா? பொன்சேகாவா?

In இலங்கை
Updated: 09:35 GMT, Jan 12, 2018 | Published: 09:16 GMT, Jan 12, 2018 |
0 Comments
3200
This post was written by : Puvanes

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை மிகரகசியமான முறையில் கொலைசெய்வதற்கு வெளிநாட்டு ஆயுதநிறுவனம் ஒன்றின் மூலமாக நவீனதுப்பாக்கிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டார். சம்பவம் நடந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது மீண்டும் விசாரணைகள் சூடுபிடித்துள்ளன.

இந்தநிலையில், லசந்தவை கொலை செய்வதற்காக ராணுவத்திற்கு ஆயுதம் வழங்கும் சர்வதேச ஆயுதநிறுவனம் ஒன்றின் மூலமாக இலங்கைக்கு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், லசந்தவை கொலைசெய்ய உபயோகிக்கப்பட்ட ஆயுதத்தை சர்வதேச ரீதியில் சக்திமிக்க ஆயுத குழுக்கள் மாத்திரமே பாவித்து வருவதாகவும், இந்த துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இதற்கு முன்னர் கொலைகள் செய்யப்பட்டதாக எந்தவித பதிவுகளும் இல்லை எனவும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று குறித்த ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள காலகட்டத்தில்   ராணுவத் தளபதியாக செயற்பட்டவர் தற்போதைய அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

சம்பவத்தினத்தன்று லசந்த விக்ரமதுங்க தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு பிற்பகல் வேளையில் காரில் பயணம் செய்யும் போது, அவரை மோட்டார் சைக்களில் நால்வர் பின்தொடர்ந்துள்ளனர்.

லசந்த ஒருபாதையில் இருந்து மாற்றுப்பாதைக்கு  திரும்பும்போது அவரை இடைமறித்து முப்புறம் இருந்தும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு நேர்த்தியாக திட்டமிடப்பட்ட கொலைக்காகவே விஷேட ஆயுதங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து லசந்தவை கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் புலனாய்வுத்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ராணுவத்தின் விஷேடகுழு ஒன்றின் மூலமாகவே லசந்த கொலைசெய்யப்பட்டார் என கடந்தகாலச் செய்திகள் வெளியாகின, பொன்சேகா,  லசந்தவின் கொலை நடத்தப்பட்ட காலத்தில்   ராணுவத்தளபதியாக செயற்பட்டுள்ளார்.

அதேபோன்று அப்போதைய பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டுவந்தமையும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய செய்திகளின்படி பொன்சேகாமீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமாயின், கோட்டாபயவும் இதற்கு பதிலளிக்கவேண்டியநிலை ஏற்படும்.

ஏற்கனவே இந்த இருதரப்பும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றநிலையில் புதிய தகவல்களின்படி பொன்சேகா அல்லது கோட்டாபயமீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில் தற்போது கோட்டாபய இலங்கையில் இல்லை என்பதும் அவர் வெளிநாட்டில் தற்போது வசித்துவருகின்றார் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

lasantha001

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg