Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகள் தொடர்பில் மத்திய வங்கி கரிசனை!

In இலங்கை
Updated: 15:20 GMT, Jan 12, 2018 | Published: 09:32 GMT, Jan 12, 2018 |
0 Comments
1083
icon_com
This post was written by : Arul Jesu
New-Central-Bank-building-2

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள்  தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவற்றில் சிலவற்றை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய  அறிக்கை மத்திய வங்கி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து மத்திய வங்கி வெளியிட்டுள் அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் நாணய சபையினால் வெளியிட்ப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 திகதி வரையான காலப்பகுதியில் திறைசேரி முறிகள் விற்பனையின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 10 ஆம் திகதி மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டது.

மேலும், ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பரிந்துரைகளில் அநேகமானவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சட்டமா அதிபருடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக ஊழியர் சேமலாப நிதியத்திற்குப் பொறுப்பான துணை ஆளுநரின் தலைமையிலான முதலீட்டுக் குழு 2016 நவம்பர் மாதத்தில் இருந்து நாளாந்தக் கூட்டங்களைத் நடத்துவதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும் 2016 நவம்பர் தொடக்கம் அனைத்து முதலீடுகளும் முதலீட்டுக் குழுவின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசாங்கப் பிணையங்களுக்கு வெளியிலான முதலீடுகளுக்காக நாணயச் சபையின் முன்னனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதேபோல் உள்ளகக் கட்டுப்பாட்டு கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதாவது சிசிடிவி கமராக்கள் பொருத்தும் செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அத்துடன் 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைகக்ளத்தினையும் மத்திய வங்கி நிறுவியுள்ளது.

நாணயச் சபைக்கு சுயாதீன உத்தரவாதமொன்றினை வழங்கும் விதத்தில் காத்திரமான தன்மையினை அதிகரிக்கும் பொருட்டு அதனை விரிவுபடுத்தி அதன் செயன்முறைகளை வலுப்படுத்தும் நோக்குடன் மத்திய வங்கியின் உள்ளகக் கணக்காhய்வுத் தொழிற்பாட்டினை நாணயச் சபை மதிப்பீடு செய்யும் எனவும் அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)