Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்று தலையிடுகிறது: புடின்

In ஐரோப்பா
Updated: 09:56 GMT, Jan 12, 2018 | Published: 09:56 GMT, Jan 12, 2018 |
0 Comments
1130
This post was written by : Risha

ரஷ்ய ஜனாதிபதி பதவிக்கான அமெரிக்காவின் தெரிவாக எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி விளங்குவதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

நவால்னிக்கு ஆதரவளித்து ரஷ்ய உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை விமர்சித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

41 வயதான ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நாவல்னி ஊழல் வழக்கில் தண்டணை பெற்றதால் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதனையடுத்து அவருக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்காவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், ரஷ்ய மத்திய தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்த அமெரிக்காவின் விமர்சனம் குறித்து தெரிவித்த புடின், இது ரஷ்யா மீதான அமெரிக்காவின் தேவையற்ற தலையீடாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் இருதரப்பு உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இருதரப்பு நலனையும் பாதிக்கும் என்பதை ரஷ்யா விரைவில் உணரும் என்றும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg