Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அக்கரைபற்றில் 15 வருடங்களின் பின்னர் கால்பதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ்

In
Updated: 10:00 GMT, Jan 12, 2018 | Published: 10:00 GMT, Jan 12, 2018 |
0 Comments
1162
This post was written by : Arul Jesu

பேரினவாத அதிகாரிகளும் பெரும்பான்மைக் கட்சியிலுள்ள சில இனவாத அரசியல்வாதிகளும் தனது செயற்பாடுகளுக்கு தடைவிதிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐ.தே.க. சார்பாக உள்ளூராட்சி சபைகளை கைபற்றினாள் கட்சியின் உயர்மட்ட தலைமையிடம் முஸ்லிம்களுன் உரிமைக்காக வாதாடமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

15 வருடங்களின் பின்னர், அக்கரைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்த அடையாளத்தின் மூலம் ஏணியில் ஏறிய சிலர் இன்று அதனை மறந்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறானவர்கள் பிரதேச சபை அபிவிருத்திகளுக்கு ஒதுக்கப்படும் சிறியளவிலான நிதியுதவிகளில் பெரும் பகுதியை சுரண்டி தங்களது பைகளை நிரப்பிக்கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg