Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய சீர்த்திருத்தத்திற்கு எதிர்ப்பு: கிரேக்கம் ஸ்தம்பிதம்

In ஐரோப்பா
Updated: 10:15 GMT, Jan 12, 2018 | Published: 10:15 GMT, Jan 12, 2018 |
0 Comments
1129
This post was written by : Risha

போராட்டம் நடத்துவதற்கான கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய பதிய சீர்த்திருத்தத்திற்கு கிரேக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவுள்ள நிலையில் அதனை எதிர்த்து தலைநகரில் இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் வெடித்துள்ளது.

இன்றைய போராட்டமானது இந்த 2018ஆம் ஆண்டின் முதலாவது பாரிய தொழிற்சங்க நடவடிக்கையாக அறியப்படுகிறது.

போராட்டத்தினால் தினமும் மில்லியன் பயணிகளின் போக்குவரத்து மார்க்கமான ரயில் சேவை முடங்கியுள்ளது. இதேவேளை, வைத்தியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் வைத்தியசாலை நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

நாடாளுமன்ற ஒப்புதலுக்காக நிலுவையிலுள்ள குடும்ப நலன்களை குறைக்கும் மற்றும் தொழிற்சங்கங்களின் போராட்டத்தை பாதிக்கும் வகையிலான சட்டமூலத்திற்கு எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்ச்சியாக வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபடும் கிரேக்க தொழிலாளர்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையால் தொழிலாளர் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg