Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயற்கை விவசாயத்தை முன்னேற்ற வேண்டும்: பாமயன்

In இலங்கை
Published: 10:07 GMT, Jan 12, 2018 |
0 Comments
1057
icon_com
This post was written by : Vithushagan
IMG_9128

இயற்கை விவசாயத்தின் மூலம் செயற்கை விவசாயத்தினை முறியடிக்க வேண்டும் என தமிழ்நாட்டின் இயற்கை விவசாய வல்லுநர் எஸ். பாமயன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் இலங்கை நான் வந்தபோது இங்குள்ள நீர் வளத்தினைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். தமிழ்நாட்டிலே தூய்மையான நீருக்காக நாள்தோறும் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இலங்கையிலே குறைந்தது நூறு அடியில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நீரினைப் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ் நாட்டிலே பல கிராமங்களிலே ஆயிரம் அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துத்தான் நீரினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. குடிநீருக்காக மக்கள் நீண்ட தூரம் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

எமது முன்னோர்களின் இயற்கை விவசாயத்தில் இருந்து நாம் எங்கோயோ சென்று இரசாயனம் கலந்த செயற்கை விவசாயத்தினால் அழிவுகளுக்குள் சிக்குண்டுள்ளோம். தற்போது எமக்குத் தேவைப்படுவது எல்லாம் இயற்கை விவசாயம்தான். எமது உணவுடன் நீருடன் இரசாயனம் கலப்பதன் காரணமாகவே தேவையற்ற நோய்கள் உருவாகின்றன.

எனவே இயற்கை விவசாயத்தின் அறிவையும் அவசியத்தினையும் எல்லோரும் விளங்கிக் கொண்டு செயற்பாட்டில் இறங்க வேண்டும்.

எமது முன்னோர்களின் விவசாய முறைகள் இயற்கை விவசாயம் சார்ந்ததாகவே அமைந்திருப்பதன் காரணமாக அதன் அறிவுகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்கை விவசாயத்தில் இருந்து விடுபடுவதன் மூலமே மண்ணையும் நீரினையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்” எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)