Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கில் தேர்தல் வன்முறைகள் குறைந்துள்ளன: கீர்த்தி தென்னகோன்

In இலங்கை
Published: 10:22 GMT, Jan 12, 2018 |
0 Comments
1053
This post was written by : Vithushagan
IMG_0469

உள்ளூராட்சி தேர்தலில் வடமாகாணத்தில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக காணப்படுவதுடன்,  தேர்தல் வன்முறைகள் குறைந்துள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பாகவும் பெண்கள் பிரதிநிதிகளை அறிவுறுத்தும் செயலமர்வு  யாழில்  இன்று (வெள்ளிக்கிழமை)  இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்தகாலத் தேர்தல்களின் போது, யாழ்.மாவட்டத்தில் அதிகளவான வன்முறைகள் இடம்பெற்றதை அவதானித்திருந்தோம்.

இராணுவத்தின் தலையீடு அதிகமாக காணப்படுகின்ற பிரதேசமாக யாழ்.மாவட்டம் காணப்படுகின்றது. ஆவ்வாறு அச்சுறுத்தல் இருந்த காலத்திலும் கூட நீதியான தேர்தலை நடாத்துவதற்கான வழியை அமைத்துக்கொடுத்திருக்கின்றோம்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது, பொது மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வாக்காளர்களுக்கு விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டதாக வேறு மாவட்டங்களில் இருந்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், வடமாகாணத்தில் இருந்து மிகவும் குறைவான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இம்முறை தேர்தல் வன்முறைகள் யாழ்.மாவட்டத்தில் குறைவாக காணப்படுகின்றமையினால், அதற்குரிய கௌரவம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையே சென்றடைய வேண்டும்.

புதிய தேர்தல் முறையின் ஊடாக பல்வேறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளமையினால், அவ்வாறு ஒவ்வொரு உறுப்பினர்களின் ஆலோசனைகளின் மூலம் அபிவிருத்திகளை முன்னெடுக்கின்ற போது, நிலையான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதில் கபே அமைப்பிற்கு நம்பிக்கை உள்ளது.

சிவசேன அமைப்பிற்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளது. வேறு எந்த கட்சிக்கும் எதிராக முறைப்பாடு கிடைக்கவில்லை. தென்னிலங்கையில் உள்ள பௌத்த பிக்குகள் அரசியலமைப்பிற்கு ஆதரவாக உள்ள கட்சிகளுக்கு வாக்குகளை வழங்க வேண்டாமென தெரிவித்துள்ளார்கள். புத்தள மாவட்டத்தில் 54 வீதமானவர்கள் பெண் வாக்காளர்களாக காணப்படுகின்றார்கள்.

இவ்வாறு எவருக்கு எதிராகவும் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க முடியாதவாறு இந்த புதிய தேர்தல் முறைச் சட்டம் அமைந்துள்ளது. எனவே, இனவாதத்தினையும், மதவாதத்தினையும் உள்ளடக்காத தேர்தலாக இந்த தேர்தல் சட்டம் அமைக்கப்பட்டு, முழுக்க அபிவிருத்தி திட்டத்திற்குரிய தேர்தலாக அமையும் என நினைக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

<

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)