ஈரானுடனான உடன்படிக்கையை அமெரிக்கா கைவிட வேண்டும்: EU அதிகாரிகள்

ஈரானுடனான 2015 அணுசக்தி உடன்படிக்கையை அமெரிக்கா கைவிடக் கூடாது என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அதிகாரிகள் கூட்டாக இணைந்து நேற்று (வியாழக்கிழமை) இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் கேப்ரியல் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தமானது ஈரான் அணு ஆயுதங்களை கொள்வனவு செய்வதை தடுக்கும் என ஈரான், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அமைச்சர்களுடனான சந்திப்பை தொடர்ந்து பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அனைத்து தரப்பினரும் இந்த உடன்படிக்கைக்கு இணங்குவது அவசியமாகும் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.