Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் ‘பத்மாவத்’ படத்திற்குத் தடை!

In சினிமா
Published: 10:51 GMT, Jan 12, 2018 |
0 Comments
1103
This post was written by : Ravivarman
NTLRG_20180110101240255624

தணிக்கைக் குழுவின் அனுமதியின் பின்பும், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ‘பத்மாவத்’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி இருக்கும் படமான ‘பத்மாவத்’ சித்தூர் ராணி பத்மாவதியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.

இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து படத்தின் தலைப்பு ‘பத்மாவத்’ என மாற்றம் செய்யப்பட்டும், சில காட்சிகள் நீக்கப்பட்டதுடன், கனவுப் பாடல் காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து படத்தின் தணிக்கை குழு ‘U/A’ என அனைவரும் பார்க்கும் வகையிலான சான்றிதழ் அளித்து அனுமதி வழங்கியது. மேலும் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தணிக்கை குழு அனுமதி அளித்தும், ராஜஸ்தான், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவா மாநிலத்தில் படத்திற்கு பொலிஸ் தரப்பில் தடைவிதிக்குமாறு கோரப்பட்டுள்ள நிலையில், குஜராத் மாநிலத்திலும் படம் வெளியாகாது என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

இதேவேளை பீகாரிலும் படத்தைத் தடை செய்வது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)