Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் அல் – அஸ்ஹர் தேசிய பாடசாலையில் மரதன் ஓட்டம்!

In விளையாட்டு
Published: 10:50 GMT, Jan 12, 2018 |
0 Comments
1059
This post was written by : Vithushagan
DSC_0004

மன்னார் அல் – அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2018ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வான மரதன் ஓட்ட போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பமாகியது.

அல் – அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் குறித்த மரதன் ஓட்ட போட்டி இடம்பெற்றுள்ளது.

இந்த போட்டியானது, 12 தொடக்கம் 16 வயது பிரிவினருக்கும், 18 தொடக்கம் 20 வயது பிரிவினருக்கும் என இரு பிரிவுகளாக இடம்பெற்றுள்ளன.

இதன் போது, 12 தொடக்கம் 16 வயது பிரிவில் முதலாம் இடத்தை சம்ஸ் இல்ல மாணவன் எஸ்.சப்ரின், 2ஆம் இடத்தை சம்ஸ் இல்ல மாணவன் எம்.ஏ.ஆத்திப், 3 ஆம் இடத்தை தாஜ் இல்ல மாணவன் எம்.ஏ.அர்ஹம் அஹமட் ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், 18 தொடக்கம் 20 வயது பிரிவில் 1ஆம் இடத்தினை சிறாஜ் இல்ல மாணவன் எம்.முஜாஹீத், 2ஆம் இடத்தினை சம்ஸ் இல்ல மாணவன் என்.எம்.அகீல், 3ஆம் இடத்தினை சம்ஸ் இல்ல மாணவன் ஏ.ஜெயபிரதாப் ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

DSC_0017 (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)