Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு!

In இந்தியா
Published: 11:21 GMT, Jan 12, 2018 |
0 Comments
1033
This post was written by : Arul Jesu
Madras-High-Court-min

பதினெட்டு சட்டமன்ற உறப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில், இருதரப்பும் ஜனவரி 22ஆம் திகதிக்குள் எழுத்துப்பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்தனர்.

தினகரன் ஆதரவாளர்களான 18 சட்டமன்ற உறுப்பனர்களை, சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து குறித்த பதினெட்டு பேரும் சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதி விசாரணைக்கு வந்த வழக்கில், 500 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சபாநாயகர் தரப்பு தாக்கல் செய்தது. அப்போது மறு உத்தரவு வரும்வரை பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்துவதற்கும் நீதிபதிகள் தடை விதித்தனர்.

இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பும் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)