Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாணவர்களின் மோதலுக்கு காரணம் அரசியல் அல்ல

In இலங்கை
Updated: 11:25 GMT, Jan 12, 2018 | Published: 11:25 GMT, Jan 12, 2018 |
0 Comments
1155
This post was written by : Arul Jesu

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான மோதலின் பின்னணியில் எந்த அரசியல் காரணமும் இல்லை என அனைத்து பீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார்.

யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களின் மோதலின் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டு என சில தவறான கருத்துக்கள் வெளி வருவதாக தெரிவித்தார்.

தேர்தல் காலம் என்பதனால் வேறு பிரச்சனையாக மாணவர்களின் மோதல் சம்பவத்தை திசை திருப்ப சிலர் முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார்.

தற்போது மோதல் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில்; நேற்று கைகலப்பு ஏற்பட்ட நிலையில் கலைப்பீட 4ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிகமாக வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg