Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு தேர்தலில் இம்முறை இராணுவ தலையீடுகள் இல்லை!

In இலங்கை
Updated: 11:36 GMT, Jan 12, 2018 | Published: 11:36 GMT, Jan 12, 2018 |
0 Comments
1065
This post was written by : Anojkiyan

வடக்கு தேர்தலில் இம்முறை இராணுவ தலையீடுகள் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்க பெறவில்லை என கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) யாழில் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கடந்த கால தேர்தலிகளில் வடக்கில் குறிப்பாக யாழில் இருந்து தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் தலையீடுகள் உள்ளதாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்க பெற்றன.

ஆனால் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவ தலையீடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்க பெறவில்லை” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg