Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களுக்கு ஆதரவாக பாரிய ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Published: 11:25 GMT, Jan 12, 2018 |
0 Comments
1134
This post was written by : Risha

அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பிக்குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர்.

பலவந்தமாக கடமையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களும், பிள்ளைகளை நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்ள வலியுறுத்தி அவர்களது பெற்றோரும் கடந்த நாட்களாக முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

துறைமுக அதிகார சபையில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, பலவந்தமாக கடமையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்தனர்.

தங்களுக்கு மீண்டும் நியமனம் வழங்கும்வரை போராட்டத்தை கைவிடப் போதவதில்லை என தெரிவித்து இவர்கள் தொடர்ந்து நான்காவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களில் மூவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தமது பிள்ளைகளை நிரந்தர ஊழியர்களாக இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, மாகம்புர துறைமுக ஊழியர்களின் பெற்றோர் கடந்த நொவம்பர் மாதம் முதல் 50 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)