20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைபற்று!

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில், சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மீன்பிடி வலைகளை முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சட்டவிரோத மீன்பிடி வலைகள் கைபற்றப்பட்டுள்ளன.
நந்திக்கடல் பகுதியில் ஒருசில மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால் இறால், மீன், நண்டு இனங்கள் அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ள இவ்வாறான மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதர்கள் கைதுசெய்யப்படுவதோடு அவர்களுக்கு தண்டனையும் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.