Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு!

In இந்தியா
Updated: 12:14 GMT, Jan 12, 2018 | Published: 12:14 GMT, Jan 12, 2018 |
0 Comments
1139
This post was written by : Arul Jesu

கடந்த திங்களன்று, தொடங்கிய தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரை சபாநாயகர் இன்று (வெள்ளிக்கிழமை) காலவரையறையின்றி ஒத்திவைத்தார்.

ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் முதல் நாளே ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இதன்போது ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற டி.டி.வி தினகரன் முதன்முறையாக சட்டசபைக்கு வந்திருந்தார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பான அறிக்கை மற்றும் ‘தமிழ்நாடு’ என பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் பற்றிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை நூறு சதவீதத்தால் உயர்த்தும் சட்டவரைபு, மேயர் மற்றும் நகரசபைத் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்ய வழிசெய்யும் சட்டவரைபு, மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகளுக்கு சிறப்பு பதவி நீடிப்புச் சட்டவரைபு ஆகியவை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

மேலும், துணை நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர் செல்வம் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். இதில், போக்குவரத்துத் துறை மற்றும் குடிசை மாற்று வாரியம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டமன்ற உறப்பினர்களின் சம்பள உயர்வை ஏற்க மாட்டோம் என்று கூறி தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டவரைபை எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனையடுத்து, மீண்டும் திகதி குறிப்பிடாமல் இந்த கூட்டத்தொடரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg