Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக முக்கிய உத்தரவு!

In இலங்கை
Updated: 14:07 GMT, Jan 12, 2018 | Published: 14:07 GMT, Jan 12, 2018 |
0 Comments
1102
This post was written by : Anojkiyan

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினை தொடர்பாக யாழ்.மாநகர சபைக்கு, மல்லாகம் நீதிமன்றமானது மூன்று முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) மல்லாகம் நீதிமன்றில் குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் குறித்த உத்தரவிரனை பிறப்பித்தார்.

இதன்படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் குப்பைமேட்டினை சுற்றி வேலி அமைக்க வேண்டும் எனவும், இவ் குப்பை மேட்டில் மலக்கழிவானது கொட்டுவதற்கு தடை விதித்தும், குப்பை கழிவுகளை எரிப்பதற்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு கொட்டப்படும் பிளாஸ்ரிக் கழிவானது உரிய முறையில் முகாமைத்தும் செய்யப்பட வேண்டும் எனவும், கழிவு நீரானது உரிய முறையில் முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg