தலவாக்கலையில் மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் படுகாயம்!

தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில், 11 வயது மாணவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே குறித்த மாணவன், விபத்துக்குள்ளானார்.
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகி தலையிலும், காலிலும் அடிப்பட்ட நிலையில், குறித்த மாணவன் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வீதிக்கு அருகில் இருந்த வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வி கெமராவில் இவ்விபத்து தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளன. இதைக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், மோட்டர் சைக்கிள் செலுத்தியவரை கைது செய்துள்ளனர்.