Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும்: ஆபிரிக்க ஒன்றியம் வலியுறுத்தல்

In
Published: 03:50 GMT, Jan 13, 2018 |
0 Comments
1108
This post was written by : Risha
tr

ஆபிரிக்க குடியேற்றவாசிகள் தொடர்பான அவதூறு பேச்சு குறித்து, அமெரிக்க ஜனாதிபதி மன்னிப்பு கோர வேண்டும் என ஆபிரிக்க நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

ட்ரம்பின் பேச்சினால் அதிர்ச்சியும், சீற்றமும் கொண்ட அமைப்புகள், ட்ரம்ப் நிர்வாகம் ஆபிரிக்கர்களை தவறாகப் புரிந்துக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

குடியேற்றவாசிகள் தொடர்பாக நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே, ட்ரம்ப் இவ்வாறு அவதூறு வார்த்தை பிரயோகங்களை முன்வைத்துள்ளார்.

இதன்போது, எல்-சல்வடோர், ஹைட்டி மற்றும் ஆபிரிக்க கண்டத்திலிருந்து அமெரிக்கா வரும் குடியேற்றவாசிகள் தொடர்பாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதேவேளை, நோர்வே போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் குடியேற்றவாசிகளின் நுழைவு குறித்த கொள்கைகளில் கவனம் செலுத்துவது தொடர்பாகவும் பரிந்துரைத்தார்.

இந்நிலையில், ட்ரம்ப் இனவாத கருத்துக்களை வெளியிடுவதாக இது சர்வதேச ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் இவ்வாறான அவதூறு தெரிவிப்பது முதல் தடவையல்ல. அமெரிக்காவிற்குள் ஹைட்டியர்கள் எயிட்ஸ் பரப்புவதாக இதற்கு முன்னரும் அவதூறு தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)