Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேசம் விமர்சிக்கும் மோசமான அவதூறு வார்த்தையை பிரயோகிக்கவில்லை: ட்ரம்ப்

In
Updated: 04:21 GMT, Jan 13, 2018 | Published: 04:21 GMT, Jan 13, 2018 |
0 Comments
1145
This post was written by : Risha

தான் பயன்படுத்தியதாக சர்வதேசத்தால் விமர்ச்சிக்கப்படும் குறித்த மிக மோசமான அவதூறு சொல்லை தான் பிரயோகிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

குடியேற்றவாசிகள் குறித்த ட்ரம்பின் பேச்சு சர்வதேசத்தின் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் ட்ரம்ப் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட டுவிட் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குடியேற்றவாசிகள் தொடர்பான தனது வார்த்தை பிரயோகம் கடினமானது என்றபோதிலும், சர்வதேசத்தால் விமர்சிக்கும் மிகமோசமான வார்த்தையை தான் பிரயோகிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற குடியேற்றவாசிகள் தொடர்பான சந்திப்பொன்றின்போது, ட்ரம்ப் இவ்வாறு அவதூறு வார்த்தை பிரயோகங்களை முன்வைத்துள்ளார்.

இதன்போது, ஆபிர்க்கர்களை நாம் ஏன் அமெரிக்காவிற்குள் அனுமதிக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய ட்ரம்ப், நோர்வே போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையே நாம் அமெரிக்காவிற்குள் உள்ளீர்க்க விரும்புகின்றோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg