Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலியில் தேவாலயங்கள் மீது தாக்குதல்: பாப்பரசர் விஜயத்திற்கான அச்சுறுத்தலா?

In உலகம்
Updated: 04:53 GMT, Jan 13, 2018 | Published: 04:53 GMT, Jan 13, 2018 |
0 Comments
1254
This post was written by : Risha

சிலியின் தலைநகர் சன்டியாகோவில் உள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன.

பாப்பரசர் பிரான்சிஸ் அடுத்த வாரம் சிலிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பாப்பரசின் சிலி விஜயத்திற்கு இன்னும் மூன்று தினங்கள் மாத்திரமே உள்ள நிலையில், அவரது வருகையை அச்சுறுத்தும் வகையிலேயே இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலைநகரில் எறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சிலியில் முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வாறான சம்பவங்கள் மிகவும் விசித்திரமானதாகக் காணப்படுவதாக தெரிவித்த சிலி ஜனாதிபதி, ஜனநாயக நாட்டில் தங்களது வெளிப்பாடுகளை தெரியப்படுத்த மக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அதனை அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg