Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘லோக் ஆயுக்தா’ சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்து!

In இந்தியா
Updated: 05:31 GMT, Jan 13, 2018 | Published: 05:31 GMT, Jan 13, 2018 |
0 Comments
1071
This post was written by : Arul Jesu

வருகின்ற ‘பட்ஜெட்’ கூட்டத்தொடரில் ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திராவிடக் கட்சிகளின் ஊழல்களுக்கு எதிராக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வருகின்ற ‘பட்ஜெட்’ கூட்டத்தொடரில் ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘தமிழ் நாட்டில் ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஊழலை ஒழிப்பதற்கான அமைப்பை உருவாக்குவதை தமிழக அரசு தட்டிக் கழிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, 2013ஆம் ஆண்டின் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்து உள்ளதாகவும், அதனால் முதன்மை சட்டத்துடன் முரண்பாடு ஏற்படாத வகையில், மத்திய அரசு செய்யவுள்ள திருத்தங்களைக் கருத்தில் கொண்டு தமிழகத்திற்கான ‘லோக் ஆயுக்தா’ சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதாவது, ‘அலைகள் ஓய்ந்த பின்னர் கடலில் குளிக்கலாம்’ என்கிறார். இது எப்படி சாத்தியமில்லையோ, அதேபோல் தமிழகத்தில் லோக் ஆயுக்தா வருவதும் சாத்தியமில்லை என்பது தான் இதன் பொருளாகும்.

திராவிடக் கட்சிகளின் ஊழல்களுக்கு எதிராக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வராவிட்டால் எந்த நேரமும் மக்கள் புரட்சி வெடிக்கலாம். எனவே, அபத்தமான காரணங்களை இனியும் கூறிக்கொள்ளாமல், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg