Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானுக்கான அமெரிக்காவின் இறுதி வாய்ப்பு: பொருளாதார தடைகள் நீக்கம்

In
Published: 05:33 GMT, Jan 13, 2018 |
0 Comments
1322
This post was written by : Risha
trump-iran-deal

ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கி, ஈரானுக்கான இறுதி வாய்ப்பாக நிவாரணங்களை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை 120 நாட்களுக்கு நீக்கி, அது தொடர்பான உடன்படிக்கையில் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார்.

ஈரானின் யூரேனிய செறிவூட்டல் உலைகள் தொடர்பாக நிரந்தர கட்டுப்பாடுகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட வேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது.

அதன்படி, புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா 120 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது. புதிய உடன்படிக்கை எட்டப்படாத பட்சத்தில் 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணுசக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன.

ஆனால், அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)