Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சூப்பர் லீக்:மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:16 GMT, Jan 13, 2018 | Published: 06:15 GMT, Jan 13, 2018 |
0 Comments
1121
This post was written by : Elakkiya

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் அணியை எதிர்கொண்ட அத்லெடிகோ டி கொல்கத்தா அணி 1:0 என்ற ரீதியில் வெற்றிபெற்றுள்ளது.

கவுதாத்தியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே கொல்கத்தா அணியே பந்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. எனினும் முதல் பாதி ஆட்டம் வரை எந்த ஒரு அணியும் கோல் போடவில்லை.

இதன் காரணமாக கோல்கள் பெறப்படாமல் போட்டி நிறைவடையுமோ என்ற எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் கொல்கத்தா வீரர் ஜிகியூனா 73 ஆவது நிமிடத்தில் முதல் கோலை போட்டார்.

இதனால் 1:0 என்ற ரீதியில் கொல்கத்தா முன்னிலை பெற்றது. தொடர்ந்து பதில் கோல் போடுவதற்கு நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் அணி வீரர்கள் முயற்சித்த போதிலும் இறுதி வரை அவர்களின் முயற்சி கைகூடவில்லை.

முடிவில் 1:0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வெற்றிபெற்றது. இதன்மூலம் நடப்பு இந்தியன் சூப்பர் லீக் தொடரில் கொல்கத்தா பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும். அதேவேளை நோர்த் ஈஸ்ட்டின் ஆறாவது தோல்வியும் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg