Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவுதியில் மற்றுமொரு தடை நீங்கியது: கால்பந்து அரங்கில் பெண்கள்

In உலகம்
Updated: 05:56 GMT, Jan 13, 2018 | Published: 05:56 GMT, Jan 13, 2018 |
0 Comments
1438
This post was written by : Risha

ஆண் ஆதிக்க வரலாற்றைக் கொண்ட சவுதி அரேபியாவில், கால்பந்து மைதானத்திற்கு சென்று நேரில் போட்டிகளை பார்வையிட சவுதி பெண்களுக்கு முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனான இளவரசர் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமுல்படுத்தி வருகின்றனர். இதற்கமையே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜெட்டா நகரில் உள்ள அரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கால்பந்து போட்டியை பெண்கள், குடும்பத்தினருக்கான பகுதியில் அமர்ந்து பார்வையிட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவை, தற்போது ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு வருகின்ற நிலையில், பெண்கள் கார் ஓட்டுவதற்கான அனுமதியும் அண்மையில் வழங்கப்பட்டது.

இதற்கமைய பத்தாயிரம் பெண்களை வாடகைக் கார் ஓட்டுனர்களான பணியமர்த்தவும் சவுதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg