Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: மஹிந்த அணி திட்டம்!

In இலங்கை
Updated: 05:50 GMT, Jan 13, 2018 | Published: 05:50 GMT, Jan 13, 2018 |
0 Comments
1151
This post was written by : Vithushagan

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக  நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்க கூட்டு எதிரணியினர்  திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றமைக்கு சபாநாயகரின் தவறே காரணம் எனவும், இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பு சொல்ல வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்க ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும்  கூட்டு எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் உடன்படும் சில விடயங்களைக் கூட, நாடாளுமன்ற அமர்வுகளில் சபாநாயகர் மாற்றிவிடுவதாகவும் மஹிந்த குழு குற்றம்சாட்டியுள்ளது. சபாநாயகர் சபையில் சகல கட்சிகளுக்கும் பொதுவாக செயற்பட வேண்டியவராக இருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கூட்டு எதிர்க் கட்சி கொண்டுவரவுள்ள சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி உட்பட அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் கூட்டு எதிரணி தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg