Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவுடன் கூட்டணி வைத்து விடுதலைப்புலிகளை அழித்தோம்: கோட்டாபய

In இலங்கை
Updated: 09:18 GMT, Jan 13, 2018 | Published: 05:48 GMT, Jan 13, 2018 |
0 Comments
1920
This post was written by : Puvanes
gota001

எத்தனையோ தலைவர்கள் முயற்சி செய்தும் முடிவுக்கு கொண்டுவரமுடியாத விடுதலைப்புலிகள் இயக்கத்தை 3 வருட சிறுகாலப்பகுதிக்குள் நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருந்து முகநூல் ஊடாக வழங்கியுள்ள நேரடி ஒளிபரப்பினூடாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த நேரடிக் காணொளியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

30 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் காணப்பட்ட யுத்தத்தை நாம் நிறைவுக்கு கொண்டுவந்தோம். அதற்கு காரணம் புலிகளுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எடுத்ததோடு சரியான தலைவர்களையும் உருவாக்கியமையே ஆகும்.

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததது மாத்திரமல்லாமல் அதன்பின்னர் நாட்டை அபிவிருத்திப்பாதையில் கொண்டு சென்றோம் என்பதை குறிப்பிட்டு கூறியாக வேண்டும்.

அதேபோல விடுதலைப்புலிகளுடனான யுத்த காலகட்டத்தில் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர இந்தியாவுக்கு இருந்த முக்கியத்துவத்தினை நாம் நன்றாக அறிந்து வைத்திருந்தோம். அதன்படி இந்தியாவுடன் நேர்த்தியான திட்டங்களை வகுத்து யுத்தவெற்றியையும் பெற்றோம்.

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் நாட்டை அபிவிருத்திபாதையில் கொண்டு சென்றோம். இராணுவ வீரர்களுக்காக பல்வேறு திட்டங்களையும் வகுத்து அவர்களை கௌரவப்படுத்தினோம்.

கடந்தகாலத்தில் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து நாட்டை கட்டியெழுப்பிய நிலை தற்போது காணப்படவில்லை. தற்போது நாட்டில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, மக்கள் கடன்சுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதற்கு காரணம் இப்போதைய அரசு நிறுவனங்கள் முறையாக செயற்படாதமையே.

முக்கியமாக நாட்டை அழிவுக்கு பாதைக்கு கொண்டு சென்ற 30 வருடத்திற்கும் மேலாக காணப்பட்ட யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் வகையில் சர்வதேசத்திற்கு அடிபணியவைக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக தேர்தல் வாக்குகளை நாம் பயன்படுத்தவேண்டும் என கோட்டாபய மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)