Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய ஊடகவியலாளரை வியப்பில் ஆழ்த்திய இலங்கை!

In இலங்கை
Updated: 06:08 GMT, Jan 13, 2018 | Published: 06:08 GMT, Jan 13, 2018 |
0 Comments
1787
This post was written by : Vithushagan

இலங்கையில் போர்க்காலத்திலும் அதற்குப்பின்னரான காலப்பகுதியிலும் நிலவிய பதற்றகரமான சூழல் எங்கனம் மாற்றமடைந்துவிட்டன என்பதை வியப்பபுடன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய ஊடகவியலாளர் ஆர். கே. ராதாகிருஷ்ணன்.

இலங்கையில் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 2009ஆம் ஆண்டுமுதல் சுமார் 3வருடகாலப்பகுதி இந்தியாவின் ஹிந்து ஆங்கிலப்பத்திரிகையின் கொழும்பு செய்தியாளாராக இருந்தவர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

தமிழக அரசியல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் முக்கிய விவாதியாக பல தொலைக்காட்சிகளில் தோன்றிப் பேசிவரும் ஆர்.கே. தற்போது சிறிய விடுமுறையில் இலங்கைவந்துள்ளார்.

இன்றையதினம் சுதந்திர சதுக்கத்தில் உடற்பயிற்சிக்காக சென்றபோது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனது பாதுகாப்பு வீரர்கள் சகிதம் அங்கே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்ததைக் எதிரே கண்ணுற்றுள்ளார்.

அப்போது எந்த பாதுகாப்பு நெருக்குவாரங்களும் பதற்றமும் இல்லாமல் ஜனாதிபதியும் அவரது பாதுகாப்பு தரப்பினரும் இருந்ததைப் பார்த்தாகவும் மிகவும் ரிலேக்ஸாக அவர்கள் இருந்ததாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது இந்த நாட்டில் வழமைநிலை நிரும்பிவிட்டதாக காண்பிக்க  முனைந்ததாகவும் ஆனால் அவரைக் அக்காலத்தில் இவ்வாறு கண்ணுற்றபோது பாதுகாப்பு தரப்பினர் மிகவும் பதற்றத்துடன் இருந்ததையும் நினைவுபடுத்தியுள்ளார்.

இவ்வாறு நிலைமைகள் இலங்கையில் எங்கனம் மாறிவிட்டன என தனது டுவிட்டர் பதிவில் ஆர்.கே. குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg