Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டாவது டெஸ்ட்டுக்கான இந்திய அணி- விராட் கோஹ்லி விளக்கம்

In கிாிக்கட்
Updated: 07:20 GMT, Jan 13, 2018 | Published: 07:13 GMT, Jan 13, 2018 |
0 Comments
1307
This post was written by : Elakkiya
virat-kohli-afp_806x605_41515768165

செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகவுள்ள தென் ஆபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் சமநிலை மற்றும் அமைப்பு தொடர்பாக அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

செஞ்சூரியனில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட்டில் ஆடும் லெவன் அணி பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த விராட் கோஹ்லி, “ஆடும் பதினொருவர் அணியில் ரஹானே சேர்க்கப்பட கூடாது என அனைவரும் கூறினர். ஒருவாரத்தில் அந்நிலை மாறிவிட்டது. தற்போது ரஹானே அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர். அது வேடிக்கையாக உள்ளது. வெளியில் கூறும் கருத்துக்களை வைத்து நாம் ஆடும் பதினொருவர் அணியை தீர்மானிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கேப்டவுனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா 72 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் ஆடுகள சூழ்நிலைகளில் எந்த தடையும் இருக்காது என்று உறுதியளித்துள்ளார்.

“கேப்டவுனில் விளையாடியது எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. விளையாட்டில் நிலைப்பதற்கான பல வாய்ப்புக்களை எமக்கு அளித்தது. எமது சிறந்த கிரிக்கட்டை விளையாடுவதற்கு மீண்டும் இந்த ஆடுகளத்தில் விளையாட வேண்டும். கேப்டவுன் டெஸ்ட்டில் இந்திய பந்து வீச்சாளர்கள் தமது திறமையை காட்டியுள்ளனர். ஆனால் கேப்டவுனில் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் மற்றும் செய்த தவறுகளிலிருந்து இந்திய துடுப்பாட்ட வீரர்கள் முன்னேற வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)